பிளவக்கல் அணையில் 34 அடி தண்ணீர் இருப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு, மார்ச் 3: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகள் அமைந்துள்ளன. இந்த இரு அணைகளை மூலம் 40 கண்மாய்களும், 8000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதிகள் பெறுகின்றன. கடந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக இந்த இரு அணைகள் முழு கொள்ளளவை எட்டி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டன.

இதன் மூலம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள 40 கண்மாய்களும் நிரம்பின.விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கண்மாய்களிலும் கிணறுகளிலும் இருந்ததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முதல் போக நெல் அறுவடை பணியை முடித்துவிட்டு தற்போது கோடைகால நெல் சாகுபடியினை செய்து விவசாய பணியினை மும்முறமாக தொடங்கியுள்ளனர்.

தற்போது 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 34 அடியும், 42 அடி முழு கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையின் நீர்மட்டம் 36 அடியும் உள்ளது. மேலும் இப்போது உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் கோடைகால நெல் விவசாயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்றும் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் தாங்கள் கோடை விழா அறுவடை பணியினை முழுமையாக செய்து அதிக லாபம் ஈட்டுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post பிளவக்கல் அணையில் 34 அடி தண்ணீர் இருப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: