கடையத்தில் இறைச்சி கடைக்கு சீல்

கடையம், மார்ச் 3: கடையம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோருக்கு புகார் வந்தது. அதன்பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி (பொ) நாகசுப்பிரமணியன் கடையம் பெரிய தெரு பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடையில் சோதனையில் ஈடுபட்டார். சோதனையின் போது இறைச்சி பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருப்பது, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி வெட்டுவது, பிளாஸ்டிக் பைகள், குவளைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை கைப்பற்றப்பட்டது. சோதனையில் 73 கிலோ இறைச்சி, பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. மேலும் ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

The post கடையத்தில் இறைச்சி கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: