புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

 

பல்லடம்,மார்ச்2:பல்லடம் அருகே பொங்கலூரில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்டியன்கோவில் ஊராட்சி தலைவரும், பாலாறு படுக்கை பாசன சங்கம் கூட்டமைப்பு செயலாளருமான டி.கோபால் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பல வருவாய் கிரா மங்களின் நில சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் நெருப்பெரிச்சலில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதில் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டியன்கோவில், பெருந்தொழுவு, தொங்குட்டிபாளையம், நாச்சிபாளையம் போன்ற கிராமங்களில் இருந்து சுமார் 20 கி.மீ. திருப்பூரை கடந்து செல்ல வேண்டி உள்ளது. ஆரம்ப காலத்தில் திருப்பூர் மையப்பகுதியில் இருந்த பத்திரபதிவு அலுவலகம் நெருப்பெரிச்சலுக்கு சென்றுவிட்டது.பொங்கலூரை சுற்றி உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை பொங்கலூரில் பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும் என்பது தான்.

பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்கள் பல்லடத்திலும், பல கிராமங்கள் நெருப்பெரிச்சலிலும், திருப்பூர் மாநகராட்சியின் தெற்கு பகுதியில் உள்ள சில வருவாய் பகுதிகளை பிரித்து பொங்கலூரிலும் புதிய பத்திர பதிவு அலுவலகம் திறக்கப்பட வேண்டும். தற்போது ஒன்றிய அலுவல் கத்திற்கு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே கூடிய விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம். அப்போது ஒன்றிய அலுவலகத்தை பத்திரப்பதிவு அலுவலகமாக மாற்ற வேண்டும். மேலும் அதை வணிக நோக்கத்திற்கு விடக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: