9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் வாலிபருக்கு வலை செய்யாறு அருகே

செய்யாறு, பிப். 29: செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி மாலை சிறுமி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த உறவினரான கழனிப்பாக்கத்தை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் சக்திவேல்(38) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதை பார்த்த சக்திவேல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சியாமளா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகிறார்.

The post 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் வாலிபருக்கு வலை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: