உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். முன்னதாக இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று 36 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி. மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் எ.வ.வேது. கணிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதமும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் செங்கோல் வழங்கினார்.

பிரதமர் மோடி தொடக்கி வைத்த திட்டங்களின் விவரம் பின்வருமாறு…

*கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை பிரதமர் தொடங்கி வைத்தார்.

*திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. குலசேகரப்பட்டினம் எவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் நிறனுடையது.

*தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முளையம் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

*ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

*தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

*ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலையை தொடங்கிவைத்தார்.

*நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை. ஜித்தண்டஹள்ளி-தருமபுரி 4வழிச்சாலை திட்டங்களும் தொடங்கப்பட்டது.

*10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

*வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களைப் பிரதமா் தொடங்கிவைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

*சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

The post உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: