கோனியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

 

கோவை, பிப். 27: கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 13-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 20-ம் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீருற்றி வழிபட்டு வருகின்றனர். திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளையானை வாகன திருவீதி உலா நடந்தது. இதையடுத்து, இன்று மாலை 7 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையடுத்து, முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது.

திருத்தேரை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமாரமடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைக்கின்றனர். அதன்படி, ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 4-ம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோயில் திருவிழா நிறைவடைகிறது. விழா, ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுவினர் ஆகியோர் செய்துள்ளனர்.

The post கோனியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: