மேலும் வலுவடைந்தது I.N.D.I.A. கூட்டணி: 7வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரில் தொகுதி உடன்பாடு.. அதிர்ச்சியில் பாஜக..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. I.N.D.I.A. கூட்டணியில் 7வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் பாரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டெல்லி, உத்திரபிரதேசம், குஜராத், அரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரிலும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருப்பது மூலமாக பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகளை கடந்து I.N.D.I.A. கூட்டணி வலுவடைந்து வருகிறது.

மேலும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடன் உடன்பாடு ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்தமாக I.N.D.I.A. கூட்டணி நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தக்கர் தலையிலான சிவசேனா கட்சி மற்றும் சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மேலும் வலுவடைந்தது I.N.D.I.A. கூட்டணி: 7வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரில் தொகுதி உடன்பாடு.. அதிர்ச்சியில் பாஜக..!! appeared first on Dinakaran.

Related Stories: