தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி தேவை; பொறுத்திருந்து பாருங்கள்; அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: த.மா.கா.வுக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை; பாஜக கூட்டணியில் இணைந்த த.மா.கா.வுக்கு, ஜி.கே.வாசனுக்கும் நன்றி; தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி தேவை. த.மா.கா.வுக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை.

ஜி.கே.வாசன் எப்போதும் மோடிக்கு ஆதரவாகவே உள்ளார். தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன். பெரிய மாற்றத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு இருக்கிறது. கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கொள்கையை பேசுபவர்கள் எத்தனை சீட் என பேரம் பேசமாட்டார்கள் என்று கூறினார். தொடர்ந்து அதிமுக பின்னடைவை சந்திக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; இன்னொரு கட்சியை விமர்சிப்பது நாகரீகமாக இருக்காது என்று கூறினார்.

The post தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி தேவை; பொறுத்திருந்து பாருங்கள்; அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: