எந்த கட்சி முடிவிலும் த.மா.கா. தலையிடாது; அவரவர் கட்சி அவரவர் முடிவு.. பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் பேட்டி!!

சென்னை: மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. இணைந்தது தொடர்பாக ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பா.ஜ.க. மேலிட தேர்தல் பொறுப்பாளர் அர்விந்த் மேனன் தலைமையிலான குழுவினர், நேற்று இரவு சென்னை வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே., நிறுவனர் பச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாத யாதவ் ஆகியோரையும் சந்தித்தனர். பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண்; என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க, நான்கு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி குறித்த முடிவை, இன்று அறிவிக்கப் போவதாக, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக பேச்சு நடத்தி வந்த நிலையில் முதல் கட்சியாக கூட்டணியில் இணைந்தது. மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. இணைந்தது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

பாஜகவுடன் கூட்டணி ஏன்?: ஜி.கே.வாசன் விளக்கம்
எந்த கட்சி முடிவிலும் த.மா.கா. தலையிடாது; அவரவர் கட்சி அவரவர் முடிவு. நாடாளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறோம். த.மா.கா.வுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார். தாமரை சின்னத்தில் போட்டி என வெளியாகும் செய்திகளுக்கு ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன்: ஜி.கே.வாசன்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் அரவிந்த் மேனன். பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். பாஜக கூட்டணியில் நம்பிக்கை தரும் கட்சியாக த.மா.கா. செயல்படும் என்றார்.

The post எந்த கட்சி முடிவிலும் த.மா.கா. தலையிடாது; அவரவர் கட்சி அவரவர் முடிவு.. பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் பேட்டி!! appeared first on Dinakaran.

Related Stories: