திடீரென சாலை ஓர பழக்கடை பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.22.84 கோடியில் 73 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம்

குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் 73 கிராமங்களுக்கு ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த 73 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.22.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் நபார்டு வங்கி நிதியுதவி மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் பணிகள் நடைபெற்று வந்தது. இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 4.05 மில்லியன் லிட்டர் குடிநீரை பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பென்னகோணம் அருகில் வெள்ளாற்றில் அமைக்கப்பட்ட நான்கு நீர் உறிஞ்சி கிணறுகள் மூலம் 61 குடியிருப்புகளுக்கு வழங்கவும் மற்றும் ஏற்கனவே செயலில் உள்ள 645 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள உபரி நீரை 12 குடியிருப்புகளுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

The post திடீரென சாலை ஓர பழக்கடை பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.22.84 கோடியில் 73 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: