கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓய்வு பெற்ற சிஎம்சி பேராசிரியர் பலி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்

வேலூர்: வேலூர் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிஎம்சி மருத்துவக்கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் உடல் நசுங்கி பலியானார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தேபாஷிஷ் தண்டா(62). இவர் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் ருமடாலஜி துறை தலைவராக இருந்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நிலையில் பெங்களூருவில் நாராயணா ஹெல்த் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமிதா தண்டா. இவர் தற்போது வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மரபியல்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் ஆஷீர்வாத் தண்டா. இவர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் இருந்து வேலூர் வந்த இவர் மதியம் பூட்டுத்தாக்கு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டிச்சென்றார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அலமேலுமங்காபுரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் திடீரென மோதியது. ேமாதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரியின் அடியில் சிக்கி அப்பளம்போல நொறுங்கியது.

The post கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓய்வு பெற்ற சிஎம்சி பேராசிரியர் பலி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் appeared first on Dinakaran.

Related Stories: