மூணாறு ஊராட்சி இடைத்தேர்தல் 2 வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி

 

மூணாறு, பிப்.24: மூணாறு ஊராட்சியில் 2 வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதன் மூலம் ஊராட்சியில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. மூணாறு ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்கள் 2021 டிசம்பரில் இடதுசாரி கூட்டணி கட்சிகளில் இணைந்தனர்.

அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து தேர்தல் கமிஷன் கடந்த அக்.12ல் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஊராட்சியில் 11வது வார்டு மூலக்கடை, 18வது வார்டு நடையார் ஆகிய வார்டுகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2 வார்டுகளில் 5 பேர் போட்டியிட்டனர். இதில் 11வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நடராஜன் 35 வாக்குகள் வித்தியாசத்திலும், 18வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி 59 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் ஊராட்சியில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஏ.கே.மணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து ெதரிவித்தார். தொடர்ந்து மூணாறு நகரில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர்களான குமார், முனியாண்டி, ராஜாராம், நெல்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post மூணாறு ஊராட்சி இடைத்தேர்தல் 2 வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: