கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு

 

சிவகங்கை, பிப். 24: சிவகங்கை அருகே சாலூர் ஊராட்சியில் வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் துறை திட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் வாயிலாக ஆடலும் பாடலும் நடத்தி விவசாயிகளுக்கு எளிய முறையில் புரியும்படி வேளாண் திட்டங்கள் விளக்கப்பட்டது .

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், உழவன் செயலி, நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெறும் முறைகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடி செய்யும் முறைகள் பற்றியும் பற்றியும்,நெல் சாகுபடிக்கு பின் பயிர் சுழற்சி முறையினை மேற்கொண்டு நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்யவும், நிலை நீடித்த கரும்பு சாகுபடி செய்யவும், மாவில் அடர் நடவு செய்யும் முறைகள்,

வேளாண் பொறியியல் துறையில் பவர் டில்லர் வாங்கும் முறைகள், பண்ணை குட்டை அமைப்பது, வேளாண் விற்பனை துறையில் விற்பனை விவரங்கள், பட்டு வளர்ச்சித் துறை மானியம் ஆகியவை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. நிகழ்ச்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, தம்பிதுரை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜா, கீதா ஏற்பாடு செய்திருந்தனர்.

The post கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: