அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழிசை சுந்தரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் பயிலும் 255 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா குத்தப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து, ஊராட்சி துணைத் தலைவர் உஷாநந்தினி வரதராஜன், வார்டு உறுப்பினர்கள் நிர்மலா ராஜன், யுவராணி செந்தில், தணிகைவேல், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி 255 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் கட்டிட வசதி, ஆய்வக வசதி உள்பட அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால் இன்று அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக திகழ்கிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார். இதில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மணி, கீழ்மணம்பேடு ஜானகி அமுதா, திருமழிசை மணிமேகலை, திமுக ஒன்றிய நிர்வாகிகள் கந்தன், கட்டத்தொட்டி குணசேகரன், சுகுமார், கிளை செயலாளர்கள் செல்வராஜ், துரை, பாலு, மோகன், மற்றும் குணா, பிரவீன், மணிவண்ணன், கார்த்திகேயன், தியாகு, சிபி, பிரசாத், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: