நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக பணியாற்றி பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே வரும் காலம் கணினி காலம் என்று கணித்தவர் கலைஞர். நாட்டின் முதல் ஐ.டி. பார்க்கை டைடல் பூங்காவில் 2000-ல் உருவாக்கினார் கலைஞர். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்.

தமிழ்நாடு தரவு மைய கொள்கை, தமிழ்நாட்டுக்கான தரவு கொள்கை, தகவல் தொழில்நுட்ப கொள்கைகளை வெளியிட்டுள்ளோம். தகவல் தொழில்நுட்ப நகரங்கள், டைடல் பூங்காக்களை உருவாக்க முதலீட்டாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கலைஞர் ஆட்சிக்காலம் பொற்காலம். இயற்கை பேரிடர் காலங்களில் இணையம், தகவல் தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு. உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்.

2 கனவுகளை நனவாக்க என்னையே நான் அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். ஆங்கிலமல்லாத தமிழில் முதல்முறையாக கணித்தமிழ் 24 மாநாட்டை நடத்தி இருக்கிறோம். 750 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ரூ.1100 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. மதுரையில் புதிய டைடல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், சேலம், 5 வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது இவ்வாறு கூறினார்.

The post நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: