மேஜிக் ஷோ போட்டியில் கோவை மாணவன் வெற்றி

கோவை: தென்னிந்திய அளவிலான மேஜிக்‌ஷோ நிகழ்ச்சி மற்றும் இந்திய மாய இயல் பொழுது போக்கு சங்கத்தின் 55-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான மேஜிக் நிபுணர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 55 மேஜிக் நிபுணர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் 55 நிமிடத்தில் பல்வேறு விதமான மேஜிக் செய்து காண்பித்தனர். இந்த சாதனை சிகரம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து தென்னிந்திய அளவில் சீனியர் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் மேஜிக்‌ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜூனியர் பிரிவில் சென்னையை சேர்ந்த சித்தார்த் முதல் பரிசும், கோவையை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் சுவஸ்திக் 2-ம் இடமும், சென்னையை சேர்ந்த ஆதிரா யாதவ் 3-ம் இடம் பிடித்தனர். சீனியர் பிரிவில் கோவை சேர்ந்த நந்தகுமார் முதலிடம் பிடித்தார். பெங்களூரை சேர்ந்த ஜோ மற்றும் கிரிதரன் 2 மற்றும் 3-ம் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய மாயையில் பொழுபோக்கு சங்கத்தின் தலைவர் நந்தகுமார், சென்னை மேஜிக் நிபுணர் செந்தில், பிரகாஷ் சவுக்கர் ஆகியோர் செய்திருந்தனர். தென்னிந்திய மேஜிக்‌ஷோ போட்டியில் சாதனை படைத்த கோவை மாணவர்கள் சுவஸ்திக் மற்றும் நந்தகுமார் ஆகியோரை பலர் பாராட்டினர்.

The post மேஜிக் ஷோ போட்டியில் கோவை மாணவன் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: