அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிலம் தானம் செய்த ஆசிரியர் குடும்பம்

சிவகாசி: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடிக்குளத்தை சேர்ந்தவர் ஆயி பூரணம். இவர் தனக்கு சொந்தமான ரூ.10.5 கோடி நிலத்தை அங்குள்ள அரசு பள்ளிக்கு தானமாக வழங்கினார். இதையடுத்து அவரை முதல்வர் முக.ஸ்டாலின், குடியரசு தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்ட 2 ஏக்கர் நிலத்தை, மறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குருசாமி குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர். எம்.புதுப்பட்டியை பூர்வீகமாக கொண்ட குருசாமி குடும்பத்தினர் தற்போது திண்டுக்கல், சென்னை, அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். மகன் மணிவண்ணன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்படி எம்.புதுப்பட்டி பழைய போலீஸ் ஸ்டேசன் அருகில் மேட்டுப்பட்டி சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேற்று தானமாக எழுதி கொடுத்தனர். குன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது.

The post அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிலம் தானம் செய்த ஆசிரியர் குடும்பம் appeared first on Dinakaran.

Related Stories: