நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அதனை திறக்க அனுக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாத சூழலில் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின் போது வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிகஞர் ஷியம் தவான்; ஆலை நிர்வாகம் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியில் எந்த மாசும் ஏற்படவில்லை, தேவைபட்டால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வுகள் நடத்தி அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை பிறபிக்களாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியராஜனை பொறுத்த வரையில், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்க கூடிய பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் சல்பேட், பாஸ்பேட், அஅகியவையும் வேறுபட்ட உலோக கலவையும் அதிக அளவில் கலந்துள்ளது. அதனால் 25 சதவிகித பகுதிகளில் பசுமை வெளிகள் (GREEN belt) அமைக்க வேண்டும். இதனை ஆலை நிர்வாகம் செய்யாத சூழலில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கபட்ட குழு ஏற்கனவே ஆலையை ஆய்வு செய்ததில், ஆலையில் இருக்கும் கழிவுகளை கையாளுவதற்கு உரிய சட்டம் இல்லை, அதே போல் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு அதிகமாக இருப்பதாக குழு தெரிவித்திருந்தது.

இது மட்டுமின்றி, நிலத்தடி நீரில் மாசு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களுக்கு மாசுபட்ட குடிநீரே கிடைக்கிறது. எனவே அந்த ஆலையை பிறப்பிக்க அனுமதிக்க கூடாது என வாதங்கள் முன்வைக்கபட்டது.

கடந்த 6 ஆண்டுகளாக ஆலை மூடபட்டுள்ள நிலையில், நிலத்தடி நீரில் முன்னேற்றம் ஏற்படவில்லையா என கேள்வியெளுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு வழக்கறிஞர், நிலத்தடி நீரில் கலந்துள்ள மாசு நீங்கி இயல்பு நிலைக்கு மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடமுடியாது என நீதிபதி கூறினர்.

The post நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: