தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்

சென்னை: தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் மனு அளித்தார்.

அவர் அளித்துள்ள மனுவில்; “பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் மற்றும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் மேற்படி நபர் எந்த ஆதாரம் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் என் பெயருக்கும் மற்றும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்னர்.

மேற்படி உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். மேற்படி நபர் மீதும் மற்றும் யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி தடவடிக்கை எடுத்து மேற்படி விடியோ பதிவினை நீக்க உத்திரவு பிறபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

The post தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் appeared first on Dinakaran.

Related Stories: