தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். அதேப்போன்று ஆலையின் உள்ளே இருக்கும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் வரை வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாதுஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் உத்தரவை தவறு என கூற முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டது. ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்பிக்க உத்தரவிட வேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீரி, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், வேதாந்தா பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளது.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: