விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10%கூட ஒன்றிய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை; முழு நோ அப்பனும் இல்லை; பிள்ளையும் இல்லை. 30ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். அனைவரும் வாக்களிக்க வேண்டும்; அரசியலில் விட்டு என்னை போக வைக்க முடியாது ஓட்டு போடதாவர்கள் முழு நேர குடிமகன்கள் இல்லை. நாட்டு மக்களின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது.

விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சமமான வரிப்பகிர்வு அவசியம். தேர்தல் பத்திரம் மூலம் யாரிடமும் காசு வாங்கவில்லை. அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயுடன் ஏற்கனவே பேசியிருக்கிறேன். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து தான் மட்டும் தனியாக சொல்ல முடியாது, மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டுதான் கூற முடியும் இவ்வாறு கூறினார்.

The post விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10%கூட ஒன்றிய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: