10, 12ம் வகுப்புகளுக்கு 2025-26ம் ஆண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வு: ஒன்றிய அமைச்சர் தகவல்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த விழாவில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: கடந்த 2020ல் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று, மாணவர்களிடம் கல்வி அழுத்தத்தை குறைப்பதாகும். அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கீழ், மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தும் நடைமுறை 2025-26ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதில், 2 தேர்வுகளையும் எழுதும் மாணவர்கள் எதில் அதிக மதிப்பெண்ணோ அதை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

* 10 நாள் நோ-பேக் டே

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் 10 நாட்கள் புத்தக பை இல்லாத நோ-பேக் டே கடைபிடிக்கப்பட வேண்டும். அந்நாட்களில் கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

The post 10, 12ம் வகுப்புகளுக்கு 2025-26ம் ஆண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வு: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: