காஞ்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் அண்ணா அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மேயர் மகாலட்சுமியுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் செந்தில் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் அன்னை அஞ்சுகம் மண்டபம் சீரமைப்பு, புதிய மாநகராட்சி கட்டிடம், மஞ்சள் நீர் கால்வாய் மேம்படுத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உதவிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், காஞ்சிபுரம் எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, குடிநீர் திட்ட பணிகளுக்கு 318 கோடி ஒதுக்கிய முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பகுதிகளில் நாய்கள், மாடுகள் தொல்லை, குப்பை குவியல்கள், மீண்டும் அதிகரித்துள்ள பேனர் கலாச்சாரம், வணிக வளாகங்கள், பெரிய குடியிருப்புகளுக்கு வரி விதித்து, வரி வசூல் செய்ய வேண்டும் போன்றவற்றில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். மேலும், கூட்டத்தில் 83 தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post காஞ்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: