திருப்போரூரில் பிரம்மோற்சவ விழா கந்தசாமி கோயிலில் நாளை தேரோட்டம்: தேரை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (21ம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று காலை முதல் தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து தேர் முழுவதையும் கோயில் ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர்.

இதனிடையே, மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ரவி அபிராம் தேரோட்டம் நடைபெறும் நான்கு மாடவீதிகளையும் பார்வையிட்டார். நாளை 21ம் தேதி அதிகாலை முதல் நான்கு மாடவீதிகளிலும் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும். மேலும், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

செங்கல்பட்டு, மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களில் திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து வீராணம் சாலை வழியாகவோ அல்லது புறவழிச்சாலை வழியாகவோ செல்லலாம். செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

The post திருப்போரூரில் பிரம்மோற்சவ விழா கந்தசாமி கோயிலில் நாளை தேரோட்டம்: தேரை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: