கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

வேலூர்: வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டையா மகாநதி கரையில் உள்ள கங்கை அம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் அம்மன் சிரசு திருவிழா என்றால் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக குழுமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். சிலம்பாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பம்பை, உடுக்கை, மேளதாளம் முழங்க குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

இந்த திருவிழாவிற்கு வேலூர் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

The post கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: