மாபெரும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய இலக்குகளை முன்வைத்தே தமிழக பட்ஜெட் தயாரிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முதல்முறையாக இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையில்,

“இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது.

“100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு பேரவையில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் மக்கள் நலத்திட்டங்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.வெறும் புள்ளிவிவரமாக இல்லாமல் கடைக்கோடி தமிழர்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக பட்ஜெட் இருக்கும்.

“தமிழ்நாடு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 தலைப்புகளில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்த 7 இலக்குகளை முன்வைத்தே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

“சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.தமிழ்நாட்டு இலக்கிய படைப்புகளை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

“செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை நவீனப்படுத்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

“கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். ரூ.65 லட்சத்தில் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் .

“2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

 

The post மாபெரும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய இலக்குகளை முன்வைத்தே தமிழக பட்ஜெட் தயாரிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு!! appeared first on Dinakaran.

Related Stories: