கோயில், சுற்றுலா பகுதிகளில் ரோடு சீரமைப்பு பணி

 

கோவை, பிப்.18: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கிய மாவட்டங்களில் ரோடு சீரமைப்பு பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நீண்ட காலம் முடங்கிய திட்ட பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில் கோத்தகிரி, நீலகிரி, வால்பாறை, ஆனைமலை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்லும் ரோடுகள், சந்திப்பு பகுதிகள் மேம்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள மாவட்ட ரோடு, இதர கிராம ரோடு சீரமைப்பிற்கான பணிகள் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.

திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் சீரமைக்க பணி ஒப்புதல் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ஆற்காடு திண்டிவனம் ரோடு, திருவத்திபுரம் பைபாஸ் ரோடு 72.34 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இரு வழிப்பாதையை 4 வழியாக மாற்றி பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 1200 கோடி ரூபாய் செலவில் ரோடு சீரமைப்பு, சிறு பாலங்கள், தடுப்பு சுவர் கட்டுதல், மழை நீர் வடிகால் அமைத்தல் பணிகள் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

The post கோயில், சுற்றுலா பகுதிகளில் ரோடு சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: