வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பாரத் ஸ்டேட் வங்கி முன்பு ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், மீனவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய விலைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நியமிக்க வேண்டும். விவசாயிகள் படுகொலையின் முக்கிய காரணமாக இருந்த உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா தேனியை பதவி நீக்க செய்ய வேண்டும். சிறு குரு விவசாயிகளுக்கு விடுதலை தரும் வகையில் விரிவடைந்த கடன் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: