விழாவையொட்டி, வள்ளி – தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி காட்சியளித்தார். பின்னர், இரவு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தத்ரூபமாக தங்கத்தால் செய்யப்பட்டது போல் காட்சியளித்த மயிலின் மீது முருகன் அமர்ந்து முக்கிய தெருக்களின் வழியாக வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளார். பின்னர், 19ம் தேதி மாலை 4 மணியளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வருகிற 21ம்தேதி காலை 9 மணியளவில் ரத உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
The post மாசி பிரம்மோற்சவ விழாவில் தங்கமயில் வாகனத்தில் உலா வந்த முருகப்பெருமான்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.