செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்வ கணபதி ஆலயம். இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, புன்யாஹவாசனம், கலசபந்தனம் அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம் பூர்ணஹூதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விசேஷ ஹோமமும், பூர்ணஹூதி, மகா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் உள்ள புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீசெல்வ கணபதிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பேரம்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: