ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் அஜிலியா மலர்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச்செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல் வெளிநாடுகளில் காணப்படும் மரங்கள், மலர் செடிகள் பூங்காவில் உள்ளது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது பனிக்காலம் என்பதால், சீனா நாட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் குயின் ஆப் சைனா மலர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரங்களில் பூத்துள்ளது.

அதேபோல், இத்தலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும். முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீனா நாட்டின் மலரான குயின் ஆப் சைனா மலர்கள் மற்றும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் அஜிலியா மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: