தாளபுரீஸ்வரர் கோயிலில் மகோத்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது செய்யாறு அருகே திருப்பனங்காட்டில் உள்ள

செய்யாறு,பிப்.16: செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள அமிர்தவல்லி அம்பாள் சமேத தாளபுரீஸ்வரர் கோயிலில் மகோத்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள அமிர்தவல்லி அம்பாள் சமேத தாளபுரீஸ்வரர் கோயிலில் மகோத்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு சிம்ம வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவினையொட்டி கடந்த 13ம் தேதி கிராம தேவதை சிம்ம வாகன உற்சவமும், 14ம்தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலாவும் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை மேஷ லக்னத்தில் துவஜாரோகணம் செய்து முறைப்படி மகா வைபவத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை சுவாமி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்திலும் 18ம்தேதி காலை நாக வாகனத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும், 19ம் தேதி பல்லக்கிலும், இரவு திருக்கல்யாண பனையடி சேவையும், 20ம் தேதி விஸ்வரூப வசந்த உற்சவ நிகழ்ச்சியும், இரவு யானை வாகன சேவையும் நடைபெறுகிறது. 21ம் தேதி திருத்தேர் வைபோகமும், 22ம்தேதி காலை கேடய உற்சவமும், இரவு குதிரை வாகன சேவையும், 23ம்தேதி பல்லக்கிலும் சுவாமி வீதி உலாவும், இரவு அதிகார நந்தி சேவையும் 24ம் தீர்த்தவாரி நடராஜர் உற்சவமும், இரவு கொடி இறக்கமும், அன்ன வாகனம் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்விழாவில் இறுதி நாள் 25ம்தேதி தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இ இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post தாளபுரீஸ்வரர் கோயிலில் மகோத்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது செய்யாறு அருகே திருப்பனங்காட்டில் உள்ள appeared first on Dinakaran.

Related Stories: