108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு முதல்வரை சந்தித்து மனு அளிக்க முடிவு

குளச்சல், பிப்.16: குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தலக்குறிச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் மகிழ்ச்சி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தர்மராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மண்டல செயலாளர் முகைதீன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், செயலாளர் காளிதாஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பேச்சிப்பாறை பி.எச்.சி., 2. தூத்தூர் பி.எச்.சி., கன்னியாகுமரி ஜி.எச்., ஆசாரிப்பள்ளம் எம்.சி.எச், வடசேரி பி.எச்.சி.,6. கோட்டார் ஏ.எம்.சி.எச்.ஆகிய 108 ஆம்புலன்ஸ்களை இயக்காமல் நிறுத்தி வைப்பதால் பொதுமக்களின் அவசரத் தேவைக்கு நீண்ட தொலைவில் இருந்தே 108 ஆம்புலன்ஸ்கள் வரவேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரை மீட்க 108 ஆம்புலன்ஸ் சென்றடைய காலதாமதம் ஏற்படுகிறது. இ.எம்.ஆர்.ஐ., ஜி.எச்.எஸ். நிர்வாகத்தின் இத்தகைய நிர்வாக சீர்கேடு நடவடிக்கைக்கு ஏதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது எனவும், கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் பொது வேலை நிறுத்தம் செய்வது எனவும் வலியுறுத்தப்பட்டது.

The post 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு முதல்வரை சந்தித்து மனு அளிக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: