பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்: திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிப்பு

ஈரோடு: பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கனிமொழி எம்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஈரோடு வந்தகுழுவிடம் பாண்டியாறு மோயாறு இணைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; நீலகிரி மலையில் உற்பத்தியாகி, கேரளாவில் நுழைந்து வீணாக அரபி கடலை நோக்கி செல்லும் பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளின் இணைப்பதன் மூலம் நீரை வீணாகாமல் தடுக்கலாம்.

கடந்த பல ஆண்டு கனவு திட்டமான இந்த திட்டம் செயல் வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் விளை நிலம், குடிநீராதாரம், நிலத்தடி நீர் மட்டம் உயரும். பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்ட வழிப்பாதையை நாங்கள் குழு அமைத்து நேரில் ஆய்வு செய்து, அதன் சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளோம். வரும் காலங்களில் மழை பொழிவு குறைந்து, தண்ணீர் தேவை உயரும் நிலையில், இதுபோன்ற இணைப்பு திட்டங்கள் விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீர், நிலத்தடி நீராதாரத்துக்கும் பயனுடையதாக இருக்கும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

The post பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்: திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: