அத்திவாக்கம் கிராமத்தில் காட்சி பொருளாக உள்ள ரேஷன் கடை: திறக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: அத்திவாக்கம் கிராமத்தில் காட்சி பொருளாக உள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ரேஷன் கடையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர்.

இந்நிலையில் இந்த ரேஷன் கடை மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால், அருகில் உள்ள இ-சேவை மையத்தில் ரேஷன் பொருட்களை வழங்கி வந்தனர். இதனால் அத்திவாக்கம் பகுதிக்கு ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2021 – 22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் அதை தற்போது வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அத்திவாக்கம் கிராமத்தில் காட்சி பொருளாக உள்ள ரேஷன் கடை: திறக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: