சூலூரில் கலைஞர் உருவச்சிலை அமைவிடம்; கனிமொழி எம்பி பார்வையிட்டார்

 

சூலூர், பிப்.11: சூலூரில், கலைஞர் உருவச்சிலை அமைவிடத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே கணியூர் ஊராட்சியில் கருணாநிதியின் உருவச்சிலையும், 106 அடி உயர கொடி கம்பமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பு தொடர்பான பணிகளுக்காக கோவை வந்த திமுக எம்பி கனிமொழி நேற்று சிலை அமைவிடத்தை பார்வையிட்டார்.

சிலை அமைப்பு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனிடம் கேட்டு அறிந்தார். மேலும், சிலை மற்றும் கொடிக்கம்பம் அமைக்க நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட கனிமொழி சிறப்பாக அமைக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது அவருடன் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்திய மனோகரன் மற்றும் கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து, பணிகள் தொடர்பான வரைபடங்களை பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார் கனிமொழியிடம் காண்பித்து விரிவாக எடுத்துரைத்தார்.

The post சூலூரில் கலைஞர் உருவச்சிலை அமைவிடம்; கனிமொழி எம்பி பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: