சென்னை: அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். 10 ஆண்டில் தமிழ்நாட்டுக்காக பாஜக என்னென்ன செய்துள்ளது என பட்டியலிட அண்ணாமலை தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இன்று வரை ஒரு பணிகள் கூட தொடங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.