சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,830க்கும் ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.76.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.