குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

குளித்தலை, பிப்.10: ஆடி அமாவாசையை முன்னிட்டு குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டது. தமிழ் மாதங்களில் ஆடி ,புரட்டாசி, தை மாதங்களில் வரும் மகாளய அமாவாசைகளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி தை அமாவாசையான நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தேங்காய், பழம், அரிசி, எள் காய்கறிகள் படையலிட்டனர். மறைந்த தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து எள் பிண்டம் தர்ப்பணம் செய்து வழிபட்ட பின்னர் அதனை காவிரி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையும் வழங்கினர்.

The post குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Related Stories: