விசாரணைக்கு தடை கோரி பினராயி விஜயன் மகள் வழக்கு

பெங்களூரு: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற பெங்களூருவை மையமாக கொண்ட ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவனம், கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் சேவைகளை வழங்குவதாக ஒப்பந்தம் செய்தது.

ஆனால் எந்த சேவையும் வழங்கப்படாமலேயே 3 ஆண்டுகளில் வீணாவின் நிறுவன வங்கிக்கணக்குக்கு ரூ.1.72 கோடி அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சிறப்பு மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எப்ஐஓ) விசாரிக்க தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வீணா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

The post விசாரணைக்கு தடை கோரி பினராயி விஜயன் மகள் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: