பாரதப்புழா நதிக் கரைகளில் தூய்மைப்பணிகள் துவக்கம்: மூலிகை செடிகள் நடவு

 

பாலக்காடு,பிப்.9: பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தூய்மைப்பணியாளர்கள் அமைப்பு சார்பில் பாரதப்புழா நதிக்கரைகளில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு முதல் பாரதப்புழா நதிக்கரையோரங்கள் புதுப்பொலிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டும் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே மங்கலம் காயத்திரி நதிக்கரையோரம் சுத்திகரிப்பு, தூய்மைப் பணிகள் தூய்மைப் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இந்த சுத்திகரிப்பு பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள் மூலிகை செடி நடவு செய்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சாமுன்னி தலைமை தாங்கினார். காயத்திரி நதிக்கரையோரங்களில் மூலிகை விதைகள் நடவு செய்து சுற்றுச்சூழலை பேணிக்காப்போம் என தூய்மைப்பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாரதப்புழா நதியின் கைவரிசை நதியான வடக்கஞ்சேரி அருகேயுள்ள மங்கலம் காயத்ரி நதிக்கரையோரம் தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப்படுத்தி மூலிகை செடிகள் நடவு செய்துள்ளனர்.

இந்த திட்டப்பணிகள் வருகிற 16ம் தேதி வரையிலாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் செய்து வருகிறது. இவ்விழாவில் வடக்கஞ்சேரி கிராமப்பஞ்சாயத்து தலைவர் லிஸி சுரேஷ், வண்டாழி கிராமப் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ராமன்குட்டி, டாக்டர். வாசுதேவன் பிள்ளை, மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாரதப்புழா நதிக் கரைகளில் தூய்மைப்பணிகள் துவக்கம்: மூலிகை செடிகள் நடவு appeared first on Dinakaran.

Related Stories: