நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லி வந்தும் போராட்டம் நடத்தியுள்ளார். இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ‘நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்; மாநிலங்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பாஜக மாநில முதல்வர்களுக்கு அதேநிலையே ஏற்படும். கூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காப்பதற்காக INDIA கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தனர்; பிரதமர் மோடி அவ்வாறு மதிப்பதில்லை. பிரதமர் மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல் நடத்துகிறார். மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை. இதற்கு காரணமான மத்திய பாஜக அரசு, மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து பாசிச பாஜகவை வெளியேற்றுவோம்,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.