நிலக்கோட்டை கட்டக்கூத்தன்பட்டியில் 32 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

 

நிலக்கோட்டை, பிப். 8: நிலக்கோட்டை ஒன்றியம், குல்லலக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது கட்டக்கூத்தன்பட்டி. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்டக்கூத்தம்பட்டி முதல் கந்தப்பக்கோட்டை இணைப்பு சாலை வரை புதிய தார் சாலை அமைக்க ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி, பழநி எம்எல்ஏவும், திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில் குமார் வழிகாட்டுதலின்படி, தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முயற்சியில் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் யசோதா தேவராஜ் கலந்து கொண்டு சாலை பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காளிமுத்து, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் பிரிட்டோ சகாயராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், தெப்பங்குளம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, கட்சி பொறுப்பாளர்கள் பெரியசாமி, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

The post நிலக்கோட்டை கட்டக்கூத்தன்பட்டியில் 32 லட்சத்தில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: