எட்டிமடை 2வது ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

 

கோவை,பிப்.6: கோவை எட்டிமடை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாவது ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழக – கேரளா எல்லையான கோவை எட்டிமடை – வாளையாறு இடையே செல்லும் ரயில் பாதை சுமார் 2 கிலோ வனப்பகுதி வழியாக செல்கிறது. இதில் வழிப்பாதையில் அடிக்கடி ரயில் யானை மோதல் விபத்தில் காட்டு யானைகள் உயிரிழந்தது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறையினர் இணைந்து சோலார் விளக்கு, ஒலி எழுப்பான் ஆகியவற்றை பொருத்தினர்.

இந்நிலையில் எட்டிமடை அருகே ரயில்வே துறை மூலம் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது சுரங்கப்பாதை கடந்த சில நவம்பர் மாதம் துவங்கியது. இந்த பணிகள் வரும் மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகள் குறித்தும், யானை வழித்தடம மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

The post எட்டிமடை 2வது ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: