சென்னை பெரும்பாக்கத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.14.87 லட்சம் திருடிய மோசடி கும்பல்: போலீசார் விசாரணை

பெரும்பாக்கம்: சென்னை பெரும்பாக்கத்தில் ஜூலி என்ற 30 வயது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14.87 லட்சம் திருடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

இத்தகைய மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் ஜூலி என்ற 30 வயது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14.87 லட்சம் திருடப்பட்டுள்ளது. ஜூலி வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ரூ.2000 செலுத்த சொல்லி உள்ளார். ரூ.2,000 செலுத்திய ஜூலியின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 8 தவணையாக ரூ.14.87 லட்சத்தை மோசடி கும்பல் திருடி உள்ளது. ஜூலி அளித்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பெரும்பாக்கத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.14.87 லட்சம் திருடிய மோசடி கும்பல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: