சென்னையில் பருவநிலை மாற்றம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு

சென்னை: சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் பருவநிலை மாற்றம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ளகால்நடைமருத்துவக் கல்லூரியின் கால்நடை பராமரிப்பு பொருளியல் துறையின் கீழ் “பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற நிலையான கால்நடை உற்பத்தியை மேம்படுத்த தகுந்த வழிமுறை உத்திகளைத் திட்டமிடல்” என்ற தலைப்பிலான 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதன் நிறைவுவிழாவில், வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் வகையில் நீர்மேலாண்மை, நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை மற்றும் கொட்டகை மேலாண்மையை உள்ளடக்கிய செயல் திட்டம் இக்காலத்தின் தேவை” என்றார். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் தலைமை வகித்து பேசினார். பல்கலைக்கழக மேலாண்மைகுழு உறுப்பினர் செல்வம் வாழ்த்தி பேசினார்.

The post சென்னையில் பருவநிலை மாற்றம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: