ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். கோயிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்த 2 யானை கற்சிலைகள் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு காணாமல் போனதாக கோயில் நிர்வாக அதிகாரி அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 2015-ல் குடமுழுக்கின்போது 3 புதிய கொடி மரங்கள் அமைக்கப்பட்டன.பழைய 3 கொடி மரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 3 பழைய கொடி மரங்களில் 2 கொடி மரங்கள் காணாமல் போயுள்ளதாக புகார். காணாமல்போன கொடி மரங்கள், சிலைகளை கண்டுபிடித்து தருமாறு மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். திருக்கோயிலில் சுண்ணாம்பு அடிக்கும் பணி மேற்கொண்ட ரமேஷ், சகோதரர் ஆகியோர் லாரி மூலம் கொடிமரங்களை வெளியே எடுத்துச் சென்றதாக அளிக்கப்பட்டுள்ளது. கொடிமரங்களை வெளியே எடுத்துச் சென்ற நிலையில் காணாததால் இருவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோயில் செயல் அலுவலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: