திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது: இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயன் எம்பி பேட்டி

சென்னை: திமுக-இந்திய கம்யூனிஸ்ட் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா அடங்கிய குழுவுடன் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம்.பி., துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி பங்கேற்றனர். அப்போது எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் சுப்பராயன் எம்பி கூறுகையில், ‘‘திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இணக்கமான அணுகு முறையை கண்டோம். நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது. கடந்த முறையை விட கூடுதல் இடம் கேட்டுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி சென்னை வருகிறார். அவர் வந்த பின்னர் தேதியை தீர்மானித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்’’ என்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று காலை 11 மணி அளவில் மதிமுகவுடனும், 12 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 

The post திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது: இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயன் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: