எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தமாகா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. முக்கிய கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கடந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளன. இந்நிலையில், தமாகா யாருடன் கூட்டணி அமைப்பது என ஜி.கே.வாசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெறுமா என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

The post எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தமாகா? appeared first on Dinakaran.

Related Stories: