சாலவாக்கம் அரசு பள்ளியில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்: சுந்தர் எம்எல்ஏ அடிக்கல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ – மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் தேவை என கோரிக்கை எழுந்தது. கோரிக்கையின்பேரில், நபார்டு திட்டத்தில் கீழ் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 3 தளங்கள், 2 கழிவறை வசதிகளுடன் கூடிய 14 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகி வெங்கடேசன், பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் பக்தவச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, திமுக நிர்வாகிகள் பாபு, பாலமுருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சாலவாக்கம் அரசு பள்ளியில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்: சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: